![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) வேலை மற்றும் உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | வேலை மற்றும் உத்தியோகம் |
வேலை மற்றும் உத்தியோகம்
கடந்த ஒரு வருடமாங்க இரண்டு முக்கிய கிரகங்களான குரு மற்றும் சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. இதனால் உங்களுக்கு மறைமுக எதிரிகளும் அலுவலகத்தில் அதிக அரசியலும் ஏற்பட்டிருந்தால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. கடந்த ஒரு வருடம் உங்கள் சக்திகளை நீங்கள் இழந்திருப்பீர்கள். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் அவமானப் பட்டிருந்தாலும் அல்லது உங்களது வேலையை இழந்திருந்தாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
தற்போது குரு பகவன் உங்கள் ராசியின் 7ஆம் வீடான ஜென்ம ராசியில் சஞ்சரிக்கின்றார். இதனால் உங்கள் அலுவலகத்தில் நீங்கள் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை எதிர் பார்க்கலாம். நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் வேறு புது வேலை தேடலாம். உங்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் வரும். மேலும் உங்கள் சம்பளமும் அதிகரிக்கும். உங்களுக்கு பல சலுகைகளும் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பிற்கு முயற்ச்சிக்க இது ஏற்ற காலகட்டமாகும். மேலும் உங்களுக்கு அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
உங்கள் புது வேலையில் அமர்ந்த பின் நீங்கள் சிறப்பாக செயல் படத் தொடங்குவீர்கள். உங்கள் முதலாளி உங்கள் வேலையை கண்டு மகிழ்ச்சி அடைவார். உங்கள் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். அலுவலகத்தில் எந்த ஒரு அரசியலும் இருக்காது. மேலும் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்களுக்கு நல்ல சன்மானமும் கிடைக்கும். எனினும் ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2019 வரை எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic