குரு பெயர்ச்சி (2018 - 2019) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

அக்டோபர் 11, 2018 முதல் மார்ச் 27, 2019 வரை கடுமையான சோதனை காலம் (30 / 100)


குரு பகவான் அர்த்தாஷ்டம சனி காலம் நடந்தாலும் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து பிரச்சனைகளை குறைத்து நல்ல பலன்களை தந்திருப்பார். ஆனால் தற்போது குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பல கசப்பான அனுபவங்களை தரப் போகிறார். நீங்கள் இந்த காலகட்டத்தில் அர்த்தாஷ்டம சனியின் உண்மையான தாக்கத்தை உணருவீர்கள்.
உங்கள் உடல் நலம் பெரிதாக பாதிக்க கூடும். வயிற்று வலி, மூட்டு வலி, முதுகு மற்றும் கழுத்து வலி, பித்தப்பை பிரச்சனையை கல் போன்ற பிரச்சனைகள் வரக் கூடும். உங்கள் உடல் நல பிரச்சனைகளுக்கு சிகிச்சை தருவது கடினமான ஒன்றாக இருக்க கூடும். தக்க மருத்துவம் கிடைக்காமல் போகலாம், உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்பட கூடும். உங்கள் வாழ்க்கை துணைவர் மற்றும் அவரது வீட்டாரால் பிரச்சனைகள் வரக் கூடும். நீங்கள் அதிக பொறுமையோடு இருந்து இந்த காலகட்டத்தை கடக்க வேண்டும். காதலர்கள் அதிக சவால் நிறைந்த சூழலை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


உங்கள் பிறந்த ஜாதகத்தின் பலன் இல்லை என்றால் நீங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலை சுமை அதிகரிக்க கூடும். மேலும் உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் வரக் கூடும். நீங்கள் அவமானப் படும் படியான சூழல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் நீங்கள் உங்கள் வேலையை ராஜினாமா செய்யும் எண்ணமும் உங்களுக்கு வரக் கூடும். எனினும் தற்போது இருக்கும் இந்த சூழலை நீங்கள் பொறுமையோடு சமாளித்து தான் ஆக வேண்டும். தொழிலதிபர்களுக்கு எதிர் பாராத பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் போட்டியாளர்களால் நீண்ட கால ப்ராஜெக்ட் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களை இழக்கும் சூழலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் ஜாதக பலன்கள் பலவீனமாக இருந்தால் உங்கள் வங்கி கணக்கு திவால் ஆகும் சூழலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உங்கள் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் சேமிப்புகள் விரைவாக கரையக் கூடும். நீங்கள் உங்கள் நிதி தேவைகளுக்கும் தினசரி தேவைகளுக்கும் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். நீங்கள் முதலீடு ஏதேனும் செய்ய நினைத்தால் அது பெரிய அளவு இழப்பை ஏற்படுத்த கூடும். பங்கு சந்தை முதலீட்டில் இருந்து முற்றிலுமாக தள்ளி இருப்பது நல்லது. உங்கள் நேரம் சரி இல்லாமல் இருக்கும் நேரத்தில் பங்குகளின் விலை அதிகரிக்கும். நீங்கள் வாங்க எண்ணினால் பங்குகளின் விலை குறையும். எது நடந்தாலும் நீங்கள் லாபத்தை எதிர் பார்க்க முடியாது.



Prev Topic

Next Topic