குரு பெயர்ச்சி (2018 - 2019) ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

ஆரோக்கியம்


குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து கடந்த சமீப காலத்தில் உங்களுக்கு நல்ல உடல் நலத்தை கொடுத்திருப்பார். தற்போது குரு 3ஆம் வீட்டிற்கு பெயருவதால் அத்தகைய ஆதரவு சற்று குறையக் கூடும். மார்ச் 2019 வரை ராகு உங்களுக்கு நல்ல பலன்களை தருவார். சனி பகவான் மற்றும் கேது மார்ச் 2019 முதல் இணைந்து சந்தரிப்பதால் உங்கள் உடல் நல பிரச்சனைகளை அதிகப் படுத்துவதோடு உங்கள் மருத்துவ செலவுகளையும் அதிகப் படுத்துவார். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலம் பாதிக்க கூடும். குறிப்பாக பெற்றோர்களின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. மேலும் உங்களுக்கு வயிற்று வழி மற்றும் உடம்பு வழி போன்ற பிரச்சனைகள் வரக் கூடும். உங்கள் பிறந்த சாதக பலன் பலவீனமாக இருந்தால் நீங்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலும் ஏற்படலாம்.
இந்த நேரம் நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும், ஏனென்றால் தீய நண்பர்கள் உங்களை திசைத் திருப்பி தவறான முடிவுகளை எடுக்க செய்யக் கூடும். உங்கள் சாதக பலன் பலவீனமாக இருந்தால் நீங்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒரு நல்ல ஆலோசகரின் உதவியை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் வெளி நாட்டில் வசிப்பவராக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தை விட்டு தொலைதூரத்தில் வசிப்பவராக இருந்தால் அதிகம் தனிமையை உணரக் கூடும். இந்த மோசமான காலகட்டத்தை கடக்க நீங்கள் அதிகம் பொறுமையோடு இருக்க வேண்டும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic