![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
குரு பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும் ராகு பகவான் 11ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது கடந்த 12 மாதங்கள் உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருக்க கூடும். உங்களுக்கு தற்போது அர்த்தாஷ்டம சனி நடந்து கொண்டிருந்தாலும், குரு பகவான் சனி பகவானால் ஏற்படக்கூடிய இன்னல்களை குறைத்திருப்பார்.
தற்போது குரு பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு அக்டோபர் 11, 2018 அன்று இடம் மாறுகிறார். இது உங்களுக்கு நல்ல செய்தி அல்ல. ராகு மற்றும் கேது மார்ச் 2019ல் இடம் மாறுவதும் நல்ல சிறப்பான பலன்களை தராது. சனி பகவான் மற்றும் கேது இணைந்து மார்ச் 2019ல் சஞ்சரிப்பது அர்த்தாஷ்டம சனியால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை அதிகரிக்க கூடும்.
உங்கள் உடல் நலம் பெரிதாக பாதிக்க படக் கூடும். மன அழுத்தம் மற்றும் பதற்றம் உங்களை அலுவலகத்தில் சரியாக வேலை பார்க்க விடாமல் தடுக்க கூடும். விசயங்கள் உங்களுக்கு எதிராக நகரக் கூடும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் வேலை இழக்கும் சூழலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அடுத்த ஒரு வருடத்திற்கு உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் கவனமாக இல்லை என்றால் சட்ட சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.
மொத்தத்தில் அடுத்த ஒரு வருடம் நீங்கள் கடுமையான சோதனை காலத்தில் இருக்க வேண்டிய சூழல் வரலாம். எந்த முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து பின் செயல் படுவது நல்லது. ரிஸ்க் நிறைந்த எந்த ஒரு முதலீடும் வர்த்தகமும் செய்வதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக ஊக வர்த்தகம் செய்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அத்தகைய முதலீடுகள் பெரிய அளவில் நட்டத்தை ஏற்படுத்த கூடும்.
Prev Topic
Next Topic