![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 27, 2019 முதல் ஏப்ரல் 25, 2019 வரை உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நல்ல மாற்றங்கள் (55 / 100)
குரு பகவான் உங்கள் ராசியின் நான்காம் வீட்டில் மார்ச் 27, 2019 முதல் ஏப்ரல் 25, 2019 வரை சஞ்சரிக்கின்றார். ஏப்ரல் 1௦, 2019 வாக்கில் குரு பகவான் வக்கிர கதி அடைகிறார். இந்த காலகட்டம் உங்களுக்கு சற்று நன்றாக உள்ளது. அர்த்தாஷ்டம சனியின் தாக்கம் சற்று குறைந்து காணப் படும். குருவின் பலத்தால் உங்கள் உடல் நல பிரச்சனைகளுக்கு தக்க மருத்துவம் கிடைக்து உடல் ஆரோக்கியம் பெரும். உங்கள் உடல் உபாதைகள் குறையும். அதிக பலம் பெற்று உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். அதனால் உங்கள் குடும்பத்தில் மற்றும் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்காது. எனினும் அலுவலகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்கள் வேலை சுமை குறையும். நீங்கள் உங்கள் எதிர் காலத்தை பற்றியும் முன்னேற்றத்தை பற்றியும் சிந்திக்க நேரம் கிடைக்கும். எனினும் புது வேலை தேட அல்லது வேலை மாற்றத்திற்கு முயற்ச்சிக்க இது ஏற்ற காலகட்டம் இல்லை. எனினும் நீங்கள் சமீப காலத்தில் உங்கள் வேலையை இழந்திருந்தால் உங்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் வங்கி கடனுக்காக வின்னப்பித்திருந்தால் அது அதிக வட்டி விகிதத்தோடு ஒப்புதல் பெரும். எனினும் நிலுவையில் ஏதேனும் வழக்குகள் இருந்தால் அதில் பெரிதாக எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாது. இந்த காலகட்டம் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள சாதகமாக உள்ளது. எனினும் குடியேற்றம் குறித்த விசயங்களில் சற்று தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பங்கு சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic