குரு பெயர்ச்சி (2018 - 2019) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


வர்த்தகம் மற்றும் முதலீடுகள் செய்வதற்கு இது ஏற்ற காலகட்டம் இல்லை. குரு 3ஆம் வீட்டிலும் சனி பகவான் 4ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்களது அதிர்ஷ்ட்டத்தை பாதிக்கக் கூடும். மேலும் ராகு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பது முதலீட்டால் ஏற்படும் இழப்புகளை மார்ச் 2019 வாக்கில் அதிகரிக்க கூடும். நீங்கள் உங்கள் பணத்தை தவறான கணக்கு மற்றும் கணிப்பால் இழக்க கூடும். அதனால் பங்கு சந்தை முதலீட்டில் இருந்து முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது.
புது வீடு வாங்க அல்லது வேறு விதமான ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்வதற்கு இது ஏற்ற காலகட்டம் இல்லை. உங்கள் வீட்டில் குடி இருப்போர்களால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களுடன் நிலம் இருந்தால் அதனால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் சாதக பலனை பார்க்காமல் எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனையும் செய்வது நல்லது அல்ல.



Prev Topic

Next Topic