![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | தொழில் அதிபர்கள் |
தொழில் அதிபர்கள்
போட்டியாளர்களின் சதியால் குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் தொழில் வளர்ச்சியில் பின்னடைவை உண்டாக்கி இருந்திருப்பார். தற்போது மறைமுக எதிர்கள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் சக்தியை இழப்பார்கள். நீங்கள் போட்டியாளர்களை எதிர்த்து சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு பல ப்ரோஜெக்ட்டுகள் கிடைத்து சிறப்பான வளர்ச்சியைப் பெறுவீர்கள். பண வரத்து தாராளமாக இருக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் வேறு ஒரு தொழிலை எடுத்து செய்வீர்கள். மேலும் கோட்டீஸ்வரராகவும் ஆவீர்கள்.
உங்கள் தொழிலில் உண்டாகும் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். ஜனவரி 2020 முதல் அதீத வளர்ச்சியை உங்கள் தொழிலில் காண்பீர்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு உங்கள் லாபத்தை பணமாக்கி, உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட முயற்சி செய்யுங்கள். ஏழரை சனியின் தாக்கம் 2021 முதல் அதிகமாக உணரப் படும். அதனால் உங்கள் குடும்பத்தினர்கள் பெயரையும் தொழிலில் சேர்த்துக் கொள்வது நல்லது. நீண்ட கால அடிப்படையில் தொழில் செய்யும் போது, உங்கள் பிறந்த சாதக பலனை பாரத்து அதன் படி செயல்படுவது நல்லது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic