![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கல்வி |
கல்வி
குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்ததால், சில பின்னடைவுகளை நீங்கள் சந்தித்து இருந்திருப்பீர்கள். குறிப்பாக, உங்கள் மேல் படிப்பு, அதாவது முதுநிலை பட்டம் அல்லது Ph.D படிப்பு பாதிக்கப்பட்டிருக்கும். தற்போது குரு உங்களுக்கு சிறப்பான பலனை தர உள்ளார். அடுத்த ஒரு ஆண்டிற்கு நீங்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள். நல்ல கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் உங்களுக்கு 2020ல் சேர்க்கை கிடைக்கும்.
வரும் நாட்களில் உங்களுக்கு கிடைக்கும் புது நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள், உங்கள் நண்பர்களுடன் நல்ல நெருக்கமான நட்போடு இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் முதுநிலை பட்டம் அல்லது Ph.D பட்டத்தை 2020ன் இறுதி பகுதியில் முடித்து பட்டம் பெற்று விடுவீர்கள். படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்குவீர்கள். மேலும் நீங்கள் விருதுகள் பெரும் வாய்ப்புகளும் உங்களுக்கு உள்ளது.
Prev Topic
Next Topic