குரு பெயர்ச்சி (2019 - 2020) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

நவம்பர் 04, 2019 முதல் மார்ச் 29, 2020 வரை பொற்காலம் (90 / 100)


சனி பகவான், கேது மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் ஜனவரி 23, 2020 வரை சஞ்சரிகின்றனர். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். காதலர்களுக்கு இது ஒரு பொற்காலம் என்று கூறலாம். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள். நீண்ட காலமாக உங்களுக்கு இருந்த கனவுகள் தற்போது இந்த பாகத்தில் நிறைவேறும்.
நல்ல சம்பளத்தோடு நீங்கள் அடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெறுவீர்கள். உங்களுக்கு அலுவலகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். உங்களுக்கு எதிராக எந்த சதியும் இருக்காது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை காண்பார்கள். இதனால் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். புது தொழில் வியப்பு உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தோடு கிடைக்கும். மேலும் நீண்ட காலத்தில் நல்ல வளர்ச்சியையும் தரும். உங்களுக்கு தற்போது இருக்கும் தொழிலோடு, புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.


ஏதாவது வழக்குகள் உங்களுக்கு நிலுவையில் இருந்தால், அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு வழக்கில் இருந்தோ அல்லது காப்பீட்டு நிறுவனத்தில் இருந்தோ ஒரு பெரிய தொகை செட்டில்மென்ட்டாக கிடைத்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நிதி நிலை மிக சிறப்பாக உள்ளது. உங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் வெளி வந்து விடுவீர்கள்.
உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்க இது நல்ல நேரம். பங்கு சந்தையில் செய்த முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும். நாள் வர்த்தகம் மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் உங்களுக்கு விண்ணைத் தொடும் அளவிற்கு லாபத்தை தரும். உங்களுக்கு ஜனவரி 23, 2020 அன்று ஏழரை சனி தொடங்கினாலும், உங்களுக்கு தொடர்ந்து குரு மற்றும் கேதுவின் பலம் இருக்கும்.



Prev Topic

Next Topic