![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | நான்காம் பாகம் |
செப்டம்பர் 13, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை சிறப்பான நேரம் (80 / 100)
குரு பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். உங்கள் நிதி நிலையில் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மருத்துவ செலவுகள் குறையும். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் போடும் முயற்சிக்கு உங்களுக்கு நிச்சயம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கும்/ உங்களுக்கு ஏழரை சனி காலம் நடந்து கொண்டிருந்தாலும், பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது. நவம்பர் 2௦, 2020க்குள் உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் 2021ல் ஏழரை சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள். மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் காதலில் விழுந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. திருமணம் ஆனவர்கள் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள். குழந்தை பேரு உண்டாகும் பாக்கியம் உங்களுக்கு உள்ளது. உங்கள் கனவு சுற்றுலாவிற்கு திட்டமிட இது ஏற்ற நேரம். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தினர்கள் சமுதாயத்தில் நல்ல பெயரும், புகழும் பெறுவார்கள்.
நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இந்த காலகட்டத்தில் கிடைக்கும். போனஸ் மற்றும் சன்மானங்கள் கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வேலை வாய்ப்பை ஏற்றுக் கொண்டு, பெரிய நிறுவனத்தில் சேர இது நல்ல நேரம். உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் அலுவலக பணிகளை எளிதாக சமாளிப்பீர்கள். தொழிலதிபர்கள் தங்களது லாபத்தை பணமாக்க இது சரியான நேரம். உங்கள் சேமிப்பு கணக்கில் அதிக பணம் சேருவதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். புது வாகனம் மற்றும் தங்க நகைகள் வாங்குவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
Prev Topic
Next Topic