![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) வேலை மற்றும் உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | வேலை மற்றும் உத்தியோகம் |
வேலை மற்றும் உத்தியோகம்
சனி பகவான் மற்றும் கேது கடந்த ஒரு ஆண்டு காலம் உங்களுக்கு அலுவலக விடயங்களில் நல்ல பலனைப் பெற உதவியாக இருந்திருப்பார்கள். குரு 1௦ஆம் வீட்டில் இருந்து உயர் பதவியில் இருப்பவர்களால் உங்களுக்கு எதிரான அரசியலையும், பிரச்சனைகளையும் ஆகஸ்ட் 2019 முதல் உண்டாக்கி இருந்திருப்பார். சமீப கடந்த நாட்களில், நீங்கள் அலுவலகத்தில் அதிக இன்னல்களை சந்தித்ததால் மகிழ்ச்சி இழந்து இருப்பீர்கள். தற்போது குரு உங்களுக்கு சிறப்பான பலனைத் தந்து, உங்களுக்கு விரைவான வெற்றியையும், வளர்ச்சியையும் பெற உதவுவார்.
புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்ய இது நல்ல நேரம். நல்ல சம்பளத்தோடு உங்களுக்கு புது வேலை வாய்ப்பும் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் நீங்கள் இருப்பீர்கள். உங்களுக்கு டிசம்பர் 2019 அல்லது ஜனவரி 2020 வாக்கில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். உங்கள் வளர்ச்சி தொடர்ந்து இருக்கும். எந்த மறைமுக எதிரிகளும், அல்லது உங்களுக்கு எதிரான சதியும் இருக்காது. உங்கள் உத்தியோகம் சுமூகமாக இருக்கும்.
வெளிநாட்டிற்கு குடி பெயர இது நல்ல நேரம். உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் உத்தியோகம், ஆகிய இரண்டையும் எளிதாக சமாளிப்பீர்கள். நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள், மார்ச் 2020 அல்லது செப்டம்பர் 2020 வாக்கில் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து, நீங்கள் விரும்பிய இடத்திற்கு, (உள்நாடு அல்லது வெளிநாடு) இடமாற்றம் கிடைக்கும்.
Prev Topic
Next Topic