குரு பெயர்ச்சி (2019 - 2020) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

தொழில் அதிபர்கள்


குரு உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவதால், உங்களது மோசமான காலகட்டம் முடிந்து விட்டது. அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். உங்களுக்கு ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை ஏறபட்ட பாதிப்புகள் பெரும் அளவு இருந்திருக்கும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்திருந்தால், உங்கள் வங்கிக் கணக்கு திவாலாகி இருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சமீப கடந்த காலத்தில் பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம்.
தற்போது விடயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறுகின்றது. நீங்கள் உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கியவர்களை கண்டறிந்து அவரளிடம் இருந்து விலகி இருப்பீர்கள். முக்கிய கிரகங்கள் உங்கள் பாக்ய ஸ்தானத்திற்கு பெயருவதால், நீங்கள் சிறப்பாக செயல் படுவீர்கள். சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு ஜனவரி 23, 2020 அன்று பெயர்ந்தாலும், உங்கள் அதிர்ஷ்டத்தை பாதிக்க மாட்டார்.


உங்கள் தொழில் வளர்ச்சி பெற பல புதுமையான யோசனைகளை செயல் படுத்துவீர்கள். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு பல நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். பண வரத்து பல வழிகளில் இருந்து வரும். வெளிநாடுகளில் இருந்தும் பண வரத்து உண்டாகும். தொழில் விரிவாக்கதிற்காக நீங்கள் முயற்சி செய்யும் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும், புது தொழிலைத் தொடங்க இது சரியான நேரம். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் அதிகரிக்கும் செல்வாக்கு, புகழ் மற்றும் வருமானத்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.



Prev Topic

Next Topic