குரு பெயர்ச்சி (2019 - 2020) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


இந்த குரு பெயற்சியோடு உங்கள் குடும்பத்தில் நிலவி வந்த கடுமையான சோதனை காலம் தற்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டது. ஜனவரி 2019 முதல் அக்டோபர் 2019 வரை பல வலி மிகுந்த சூழல்களை உங்கள் வாழ்கையில் கடந்து வந்திருப்பீர்கள். அதன் வலி தீர சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனினும், மோசமான காலகட்டம் முடிந்து விட்டது. எனினும் உங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான விடயங்களை ஜீரணிக்க உங்களுக்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். ஆகஸ்ட் / செப்டம்பர் 2019 வாக்கில் உங்கள் நற்பெயர் பாதிக்கப்பட்டிருந்தால், அல்லது குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது சட்ட ரீதியாக பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால், அது ஜனவரி 2௦2௦ வாக்கில் ஒரு நல்ல திருப்பத்தைப் பெரும். அது வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.
குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்பத்தினர்களுடன் நல்ல உறவு ஏற்பட உதவுவார். குடும்பத்தில் எந்த அரசியலும் இருக்காது. நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து விடுவீர்கள். தற்காலிகமாக உத்தியோகம், பயணம் அல்லது சொந்த காரணங்களுக்காக உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து இருந்தால், நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு அவர்களுடன் ஒன்று சேருவீர்கள். உங்கள் குழந்தைகள் நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள்.


திருமணம், புது வீடு புகு விழா, சீமந்தம், ஆண்டு விழா போன்ற சுப காரியங்கள் நிகழ்த்த இது நல்ல நேரம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரும், புகழும் பெரும். உங்களுக்கு கடந்த காலத்தில் மரியாதை தராதவர்கள், தற்போது உங்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்வார்கள்.


Prev Topic

Next Topic