![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
கடந்த ஒரு வருடமாக உங்கள் நிதி நிலை பெரிதும் பாதித்திருந்திருக்கும். நீங்கள் பணத்தை இலந்திருந்தாலோ அல்லது வங்கிக் கடன், கிரெடிட் கார்டு கடன், வீட்டு கடன் ஆகியவை அதிகரித்திருந்தாலோ, அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. ராகு நல்ல இடத்தில் சஞ்சரித்திருந்தாலும், குரு மற்றும் சனி பகவானின் மோசமான தாக்கம் உங்களுக்கு அக்டோபர் 2019க்கு முன் பெரிய அளவு நிதி பிரச்சனைகளை உண்டாக்கி இருந்திருக்கும்.
குரு தற்போது உங்கள் ஜென்ம ராசியை பாக்ய ஸ்தானத்தில் இருந்து பார்ப்பதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். உங்கள் கடனின் வட்டி விகிதத்தை குறைக்க, நிதி மறுபரிசீலனை செய்ய இது நல்ல நேரம். மேலும் உங்களுக்கு பேரம் பேசி, நல்ல சலுகை கிடைக்கவும், உங்களுக்கு கடன் தந்தவர்களிடம் இருந்து ஒரு நல்ல தீர்வுக்கு வரவும் இது நல்ல நேரம். பண வரத்து பல வழிகளில் இருந்து வரும். வெளிநாட்டில் இருக்கும் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
புது வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வு போன்ற காரணங்களால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். எந்த தேவையற்ற செலவுகளும் இருக்காது,. நீங்கள் விரைவாக உங்கள் கிரெடிட் கார்ட் நிலுவை தொகையை செலுத்தி விடுவீர்கள். மேலும் நிதி பிரச்சனைகளில் இருந்து மெதுவாக வெளி வருவீர்கள். உங்கள் செலவுகளை கட்டுபடுத்தி, முடிந்த வரை எதிர் காலத்திற்காக பணத்தை சேமிப்பீர்கள் தங்க கட்டி மற்றும் தங்க நகைகள் வாங்குவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். மேலும் உங்களது பழைய நிறுவனத்தில் நிலுவையில் இருக்கும் சம்பளத் தொகை அல்லது இன்சூரன்ஸ் செட்டில்மென்ட், போன்றவற்றில் இருந்து உங்களுக்கு ஒரு பெரியத் தொகை கிடைக்கும். மொத்தத்தில் உங்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு நிதி நிலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
Prev Topic
Next Topic