குரு பெயர்ச்சி (2019 - 2020) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

நவம்பர் 04, 2019 to மார்ச் 29, 2020 நிவாரணம் கிடைக்கத் தொடங்கும் (70 / 100)


குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து கடந்த வருடம் உங்கள் வளர்ச்சியை பெரிதும் பாதித்திருந்திருப்பார். தற்போது உங்களது மோசமான காலகட்டம் முடிந்து விட்டதால், நீங்கள் சற்று ஓய்வு எடுக்கலாம். குரு ராகுவை பார்வை இடுவதால், உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். உங்களுக்கு உள்ள உடல் உபாதைகள் குறையும். உங்களால் கடன காலத்தில் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீண்டு வர முடியும். அதனை எளிதாக ஜீரணித்தும் விடுவீர்கள். இந்த பாகத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தை உணருவீர்கள். மேலும் குறைந்த முயற்சியிலேயே நல்ல எதிர் பார்த்த பலனைப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக தீர்வு காண்பீர்கள். உங்கள் மனைவி /கணவன் மற்றும் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள், உக்னால் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட இது நல்ல நேரம். காதலர்கள் கடந்த சமீப காலத்தில் தங்களுக்கு ஏறபட்ட மன உளைச்சலில் இருந்து வெளி வர சில மாதங்கள் ஆகலாம்.


உங்களுக்கு எதிரான சதி மற்றும் அரசியலால் நீங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்திருப்பீர்கள். தற்போது உங்களுக்கு உத்தியோகத்தில் சிறப்பான வளர்ச்சி கிடைக்கும். உங்களுக்கு தற்போது இருக்கும் உத்தியோகத்தில் மகிழ்ச்சி இல்லை என்றால், நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்யலாம்,. உங்களுக்கு நல்ல சம்பளத்தோடும், பதவியோடும் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்களது தொழிலை தொடர்ந்து நடத்த போதுமான பண வரத்து உண்டாகும், உங்கள் பங்குதாரருடன் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை விரைவாக சரி செய்வீர்கள்,. மேலும் வருமான வரி குறித்த பிரச்சனைகளில் இருந்தும் வெளி வந்து விடுவீர்கள். உங்களது புதுமையான யோசங்கள் உங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியை உண்டாக்கும். தொலை தூர பயணம் இந்த காலகட்டத்தில் சிறப்பாக உள்ளது. நீங்கள் விசா ஸ்டம்பிங் செய்ய அலல்து H1B விசா விண்ணபிக்க அல்லது விரிவாக்கம் செய்ய முயற்சி செய்தால், அதற்கு இது நல்ல நேரம்.
இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பணம் யாரிடமாவது அலல்து எங்காவது தேக்கம் அடைந்திருந்தால், அது தற்போது உங்களிடம் வந்து விடும். நீங்கள் நீண்ட காலமாக வங்கி கடனுக்காக காத்திருந்தால், அது தற்போது ஒப்புதல் பெரும். உங்கள் நண்பர்களும், உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்களுக்கு சம்பளம் அல்லது முதலீடுகள் செய்ததில் இருந்து லாபம் போன்றவை மூலமாக நல்ல வருமானம் உண்டாகும். உங்கள் கடன்களை நீங்கள் விரைவாக அடைப்பீர்கள். மேலும் உங்கள் சேமிப்பும் அதிகரிக்கும். புது வீடு வாங்க அலல்து ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்ய இது நல்ல நேரம். பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு லாபம் தரும். நீங்கள் நாள் வர்த்தகம், ஊக வர்த்தகம் செய்வதாக இருந்தால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் சாதகமாக இருக்க வேண்டும்.




Prev Topic

Next Topic