![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | நான்காம் பாகம் |
செப்டம்பர் 13, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை பொற்காலம் (90 / 100)
குரு பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைவதால், நீங்கள் இந்த காலகட்டத்தில் பண மழையை எதிர் பார்க்கலாம். உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். எந்த மருத்துவ செலவுகளும் இருக்காது. உங்கள் மனைவி /கணவன் மற்றும் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் எதை செய்தாலும் அது உங்களுக்கு பெரிய அளவு வெற்றியைத் தரும்.
நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள். இதனால் மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப் படுவார்கள். நீங்கள் இந்த காலகட்டத்தில் காதலில் விழுந்தாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்களுக்கு ஏற்ற வரனைப் பார்த்து திருமணம் செய்ய இது ஏற்ற நேரம். திருமணம் ஆன தம்பதியினர்கள் நலல் அன்யுனியதோடு இருப்பார்கள். குழந்தை பேரு உண்டாகும் பாக்கியமும் உண்டு. உங்களது கனவு சுற்றுலாவிற்கு செல்ல திட்டமிட இது ஏற்ற நேரம். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரோடும், புகழோடும் இருக்கும்.
நீண்ட காலமாக நீங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்விற்காக காத்திருந்தால், இந்த காலகட்டத்தில் அது உங்களுக்கு கிடைக்கும். பங்கு சந்தையில் உங்களுக்கு கிடைக்கும் போனஸ் மற்றும் நிதி சன்மானன்களால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுக்கு நல்ல புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். இதனால் ஒரு நல்ல பெரிய நிறுவனத்தில் சேருவீர்கள். உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் வேலை சுமைகளை எளிதாக சமாளிப்பீர்கள். தொழிலதிபர்கள் தங்களது லாபத்தை பணமாக்க இது நல்ல நேரம். அதிக பணம் உங்க சேமிப்பு கணக்கில் இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். புது வாகனம் வாங்க மற்றும் தங்க நகைகள் வாங்க இது நல்ல நேரம். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
Prev Topic
Next Topic