![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | உடல் நலம் |
உடல் நலம்
கடந்த ஒரு வருடம் உங்களுக்கு அதிக மன உளைச்சாலை ஏற்பட்டிருக்கும். குறிப்பாக ஆகஸ்ட் மாதம் 2019 முதல் அதிக பிரச்சனைகளை நீங்கள் சந்தித்திருந்திருப்பீர்கள். குரு உங்கள் ஜென்ம ராசியை நவம்பர் 2019 முதல் பார்வை இடுவதால், உங்கள் உடல் நல பிரச்சனைகள் குறையும். மேலும் குரு, ராகுவை பார்வை இடுவதால், உங்களுக்கு சரியான மருத்துவம் கிடைத்து உடல் நல பிரச்சனைகள் விரைவாக குறையும். மேலும் உங்கள் உடல் நல பிரச்சனையின் மூலக் காரணத்தைத் தெரிந்து கொள்வீர்கள், மற்றும் அது குறிப்பாக அது உளவியல் காரணமாக ஏற்பட்டுள்ளது என்பதையும் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து வெளி வந்து விடுவீர்கள்.
உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவ செலவுகள் குறைவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதிக உடற் பயிற்சி செய்து உங்கள் உடலை சீராக வைத்துக் கொள்வீர்கள். தினமும் காலையில் ஆதித்ய ஹ்ருதயம் மற்றும் ஹனுமன் சலிச கேட்டு வந்தால் பலம் அதிகாரிக்கும். கோவில்களுக்கு சென்று கடவுள் தரிசனம் பெற்றும், உங்கள் மானசீக குருவின் தரிசனம் பெற்றும் நன்மைப் பெறுங்கள். ஏப்ரல் 2௦2௦ முதல் சில மாதங்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்படக் கூடும். எனினும் அதனை நீங்கள் ராகுவின் பலத்தோடு சமாளித்து விடுவீர்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic