![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் |
திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள்
திரை நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள், மற்றும் அரசியலில் இருப்பவர்கள் கடந்த ஒரு வருடம் நிதி பிரச்சனைகளை அதிகம் சந்தித்திருந்திருப்பார்கள். உங்களுக்கு எதிரான சதிகளால், துரோகம் மற்றும் ஏமாற்று வேலைகளால் உங்கள் நற்பெயரும் பாதிக்கப் பட்டிருந்திருக்கும். நீங்கள் சிறு காரணங்களுக்காக நல்ல வாய்ப்புகளை இழந்திருப்பீர்கள்.
தற்போது நவம்பர் 2019க்கு மேல் விடயங்கள் நல்ல நிலைக்கு திரும்பும். உங்களது மறைமுக எதிரிகள் பலம் இழந்து உங்கள் முன் சரணடைவார்கள். உங்களுக்கு, நீங்கள் யார் என்பதை நிரூபிக்க பல நல்ல சிறப்பான வாய்புகள் கிடைக்கும். நீங்கள் நல்ல உற்சாகம் அடைவீர்கள். மக்களும், ஊடகங்களும் உங்களை நோக்கி ஈர்க்கப் படும்.
நல்ல பெயரும், புகழும் பெறுவீர்கள். அடுத்த வருடம் நீங்கள் நடித்த அல்லது எடுத்த படம் வெளியானால், அது பெரிய அளவு வெற்றிப் பெரும். சரித்திரத்தில் இல்லாத அளவு நல்ல வசூலையும் பெரும். உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டில் ஆக அடுத்த வருடம் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
Prev Topic
Next Topic