![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (இரண்டாம் பாகம் ) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் பின்னடைவுகள் (50 / 100)
குரு, சனி பகவான் மற்றும் செவ்வாய் உங்கள் 1௦ஆம் ராசியில் இணைந்து சஞ்சரிப்பார்கள். இந்த பாகத்தில் உங்களுக்கு உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் அதிக பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும், உடல் நலம் மற்றும் குடும்பத்தில் எந்த பிரச்சனைகளும் இருக்காது. நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். மேலும் உங்கள் குடும்பத்தினர்களுடன் நல்ல உறவில் இருப்பீர்கள். உச்சம் பெரும் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவதால், நீங்கள் பதற்றம் நிறைந்த சூழலை சந்திக்க நேரிடலாம்.
அலுவலகத்தில் அரசியல் மிக அதிகமாக இருக்கக் கூடும். இதனால் உங்கள் மன நிம்மதி குறையும். நீங்கள் அடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெற்றிருந்தால், அதிக மறைமுக எதிரிகளையும், சதிகளையும் சந்திக்க நேரிடும். உங்கள் பிறந்த சாதகப் பலன் சிறப்பாக இல்லை என்றால், உங்களுக்கு பதவி இறக்கமும் நேரலாம். ஆனால், நீங்கள் வேலையை இழக்க மாட்டீர்கள். தொழிலதிபர்கள் அதிக அழுத்தம் நிறைந்த சூழலில் தங்களது ப்ரோஜெக்ட்டை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள.
முடிந்த வரை பயணத்தை தவிர்ப்பது நல்லது. குடியேற்றம் குறித்த விடயங்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேக்கம் பெறலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டை பார்வை இடுவதால், நீங்கள் நிதி குறித்த விடயங்களில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். செலவுகள் அதிகரித்து உங்கள் சேமிப்பை விரைவாக கரைக்கக் கூடும். ஊக வர்த்தகம் செய்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இதனால் பெரிய அளவு நிதி இழப்பு ஏற்படலாம். எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளும் இந்த பாகத்தில் செய்யாமல் இருப்பது நல்லது.
Prev Topic
Next Topic