![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 01, 2020 முதல் செப்டம்பர் 13, 2020 வரை நல்ல மாற்றங்கள் (65 / 100)
குரு மீண்டும் தனுசு ராசிக்கு பெயருவார், உங்களுக்கு ஏற்பட்டிருந்த பின்னடைவுகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவு நல்ல நிலையில் இருக்கும். திருமணம் ஆன தம்பதியினர்கள் குழந்தை பேரு பெரும் பாக்கியத்தைப் பெறுவார்கள். காதலர்கள் நல்ல நேரத்தை தங்களது காதல் விடயங்களில் காண்பார்கள். சுப காரியங்கள் திட்டமிட்டு நடத்த இது நல்ல நேரம்.
உங்கள் வாழ்க்கையின் பல விடயங்களில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். எனினும் குரு மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால், விடயங்களும் உங்கள் வாழ்க்கையில் மெதுவாகத் தான் நடக்கும், வேறு புதிய வேலை தேடுகின்றீர்கள் என்றால், அதற்கான நேர்காணலுக்கு உங்களை தயார் படுத்திக் கொள்ள இது சரியான நேரம். பதவி உயர்வு பெற உங்களது கடுமையான உழைப்பை போட வேண்டிய நேரம் இது. உங்கள் முதலாளியும், உயர் பதவியில் இருப்பவர்களும் உங்களுக்கு உதவி செய்வார்கள். அலுவலகத்தில் எந்த அரசியலும் இருக்காது. தொலை தூர பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும், உங்களுக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்கள் குடியேற்றம் குறித்த விண்ணப்பமும் விரைவாக இந்த பாகத்தில் ஒப்புதல் பெரும்.
உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்களிடம் வங்கிக் கணக்கில் அதிக அளவு பணம் சேமிப்பில் இருக்கும். உங்கள் வங்கிக் கடன்கள் எந்த ஒரு தடையும், சிக்கல்களும் இல்லாமல் ஒப்புதல் பெரும். ரியல் எஸ்டேட் முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும். பங்கு சாந்த வர்த்தகம் உங்களுக்கு நல்ல வருமானத்தை உண்டாக்கும். தொழில் மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்கள் இந்த பாகத்தில் பிரகாசம் அடைவார்கள். உங்கள் துறையில் உங்களுக்கு நல்ல பெயரும், செல்வாக்கும் கிடைக்கும்.
Prev Topic
Next Topic