குரு பெயர்ச்சி (2019 - 2020) வேலை மற்றும் உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

வேலை மற்றும் உத்தியோகம்


கடந்த ஒரு வருடம் உங்கள் உத்தியோகத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து இருந்திருப்பீர்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் அவமானப் படும் சூழல், பின்னடைவு மற்றும் துரோகம் என்று பலவற்றை ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை சந்தித்திருந்திருப்பீர்கள். இது உங்கள் மனதை பெரிதும் பாதித்திருந்திருக்கும். தற்போது நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக குருவின் பெயர்சியோடு மாற்றங்கள் பெற உள்ளது. குரு தற்போது தனுசு ராசிக்கு பெயருகின்றார்.
நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால், அல்லது தற்போது இருக்கும் உத்தியோகம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்றால், நீங்கள் புது வேலைக்கு முயற்சி செய்யலாம். புது வேலை உங்களுக்கு நல்ல சம்பளத்தையும் பெற்றுத் தரும். குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களது மறைமுக எதிரிகளை அழிப்பார். இதனால் வரும் நாட்களில் உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் விரைவான வளர்ச்சியையும், வெற்றியையும் பெறுவீர்கள். நல்ல முன்னேற்றத்தைத் தரக் கூடிய ப்ரோஜெக்ட்டில் நீங்கள் வேலை பார்க்க வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு இந்த வருடம் 2௦2௦ல் நல்ல சம்பள உயர்வோடு பதவி உயர்வும் கிடைக்கும்.


வெளிநாட்டிற்கு இடம் பெயர இது நல்ல நேரம். உங்கள் சொந்த வாழ்க்கையையும், உத்தியோகத்தையும் எளிதாக சமாளிப்பீர்கள். நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருகின்றீர்கள் என்றால், அது உங்களுக்கு மார்ச் 2௦2௦ வாக்கில் அல்லது செப்டம்பர் 2௦2௦ கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீங்கள் விரும்பிய இடத்திற்கு உங்களுக்கு இட மாற்றம் மற்றும் குடியேற்ற பலன்கள் உங்கள் நிறுவனத்தில் இருந்து கிடைக்கும்.


Prev Topic

Next Topic