![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
ஆகஸ்ட் 2019 முதல் உங்கள் நிதி நிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதையும், நல்ல முன்னேற்றம் ஏற்படுவதையும் கண்டிருப்பீர்கள். உங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் வெளி வந்திருப்பீர்கள். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள், பங்கு சந்தை முதலீடு மற்றும் பிற முதலீடுகள் செய்ததால் நல்ல லாபத்தை கண்டிருப்பீர்கள். குரு தற்போது உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை குறைக்கக் கூடும்.
அதிகரிக்கும் செலவுகளால் உங்கள் சேமிப்பு குறையும். நீங்கள் பயணம், குடும்பத்தில் அதிகரிக்கும் செலவுகள் மற்றும் மருத்துவம் போன்ற காரணங்களால் அதிகம் செலவு செய்ய வேண்டிய சூழல் உண்டாகலாம். யாருக்கும் கடன் கொடுப்பதோ அல்லது யாரிடமும் கடன் வாங்குவதோ நல்ல யோசனையாக இருக்காது. குரு, ராகு மற்றும் கேது உங்களுக்கு சற்று உதவியாக இருப்பார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், புது கடன்கள் அதிகரித்துக் கொண்டே போகலாம். அதிக வட்டி விகிதத்தில் உங்கள் புதிய வங்கிக் கடன் ஒப்புதல் பெறலாம்.
அதிகரிக்கும் கடன்களால் உங்கள் கிரெடிட் மதிப்பு பாதிக்கப்படலாம். இதனால் உங்கள் கடனின் வட்டி விகிதம் அதிகரித்து, மேலும் நிலைமை மோசமாகலாம். ஆகஸ்ட் 2020க்கு மேல் உங்கள் வங்கி கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம். நீங்கள் கவனமாக இல்லை என்றால்,, உங்கள் அசையா சொத்துக்களை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழல் உண்டாகலாம். செப்டம்பர் 2020 வாக்கில் பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப் படலாம்.
Prev Topic
Next Topic