![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | நான்காம் பாகம் |
செப்டம்பர் 13, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை சோதனை காலம் (30 / 100)
உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் பலம் பெற்று உங்களுக்கு உடல் நல பிரச்சனைகளை தந்துக் கொண்டிருப்பார். எந்த ஒரு எச்சரிக்கை அறிகுறி தோன்றினாலும், அதனை அலட்சியப் படுத்தாமல், உடனடியாக மருத்துவ உதவி பெறுவது நல்லது. உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கக் கூடும். உங்கள் மனைவி /கணவன் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருக்க மாட்டார். உங்கள் மனைவி/கணவன் வீட்டார்கள் உங்களுக்கு பிரச்சனைத் தரக் கூடும். குடும்பத்தில் அதிகரிக்கும் சண்டைகளால் உங்கள் மன நிம்மதி குறையும். இந்த பாகத்தில் சுப காரியங்கள் திட்டமிடுவதை தவிர்ப்பது நல்லது. காதலர்கள் கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரிடும்.
அதிகரிக்கும் கடுமையான அரசியலால், உங்கள் உத்தியோகம் பாதிக்கப்படலாம். நீங்கள் கடுமையான வாக்குவாதங்களில் ஈடு பட நேரிட்டால், அதனால் உங்கள் செல்வாக்கு பாதிக்கப்படலாம். உங்களுக்கு பதவி உயர்வோ, சம்பள உயர்வோ அல்லது, சன்மானன்களோ உங்கள் தற்போதைய நிறுவனத்தில் இருந்து கிடைக்காமல் போகலாம். தொழிலதிபர்களுக்கு இது ஒரு சோதனை காலமாக இருக்கும். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் எந்த பலனும் இன்றி கடுமையாக உழைக்க நேரிடும்.
உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்காது. புதிதாக கடன்கள் தோன்றி உங்கள் மன நிம்மதியை பாதிக்கக் கூடும். பணம் குறித்த விடயங்களில் இந்த காலகட்டத்தில் நீங்கள் ஏமாற்றப் படலாம். மேலும் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் குறித்த விடயங்களில் உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாகலாம். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு பெரிய அளவு நிதி இழப்பையும், நட்டத்தையும் ஏற்படுத்தக் கூடும்.
Prev Topic
Next Topic