குரு பெயர்ச்சி (2019 - 2020) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

உடல் நலம்


கடந்த ஒரு ஆண்டு காலமாக முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரித்ததால், உங்கள் உடல் நலம் நன்றாக இருந்திருக்கும். குரு தற்போது உங்கள் ருன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து சில உடல் உபாதைகளை தரக் கூடும். எனினும் சனி பகவான் ஜனவரி 2020 வரை உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார். பெப்ரவரி மற்றும் மார்ச் 2020 வாக்கில் விடயங்கள் மோசமாகக் கூடும். குரு ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை அதி சரமாய் மகர ராசிக்கு பெயருவதால் உங்கள் உடல் நல பிரச்சனைகளை சரி செய்ய உதவுவார்.
ஜூலை 2020 முதல் செப்டம்பர் 2020 வரை சருமத்தில் பிரச்சனை, கண்களில் பிரச்சனை அல்லது வயிர், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளில் பிரச்சனை என்று உடல் நல பிரச்சனைகள் ஏற்படக் கூடும். ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு செப்டம்பர் 2020 வாக்கில் பெயர்ந்த உடன் உங்களுக்கு விரைவான நிவாரணம் கிடைக்கும். குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு எச்சரிக்கை செய்வது போல உள்ளது. முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிபப்தால், பெரிய அளவில் எந்த உடல் நல பிரச்சனைகளும் ஏற்படாது. அப்படியே உங்களுக்கு ஏதாவது உடல் நல பிரச்சனை ஏற்பட்டாலும், நீங்கள் உடனடியாக குணமடைவீர்கள். மூச்சு பயிற்சி மற்றும் த்யானம் செய்து உங்கள் நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். ஹனுமன் சலிச அல்லது ஆதித்ய ஹ்ருதயம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic