குரு பெயர்ச்சி (2019 - 2020) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

காதல்


கடந்த நாட்களில் காதல் விடயங்களில் உங்களுக்கு நல்ல நேரம் இருந்திருக்கும். குரு தற்போது உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயர்ந்து சில பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். உங்கள் மனைவி/கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடும். நீங்கள் விரும்புபவருடன் அதிக நேரம் செலவிட முடிந்தாலும், காதல் குறைந்தே காணப்படும். ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ஏதாவது சண்டை அல்லது பிரச்சனைகள் இருந்தால், அதை உங்களால் சரி செய்து விட முடியும்.
காதல் திருமணத்திற்கு ஒப்புதல் பெற உங்கள் பெற்றோர்களை சம்மதிக்க வைப்பது ஒரு கடினமான சவாலாக இருக்கும். எனினும் ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை நீங்கள் எடுக்கும் இந்த முயற்சி வெற்றி பெரும். ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு செப்டம்பர் 2020 பெயர்ந்து குருவால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க உதவுவர். திருமணம் ஆனவர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். உங்களுக்கு அன்யுனியம் சுமாராக இருக்கும். திருமணம் ஆனவர்கள் குழந்தை பேரு பெறுவதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும். செவ்வாய் செப்டம்பர் 2020 வாக்கில் வக்கிர கதி அடைவதால், நீங்கள் IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சைகளை தவிர்பப்து நல்லது. நீங்கள் பெண்ணாக இருந்து, கருவுற்றிருந்தாள், உங்கள் உடல் நலத்தின் மீது அதிக கவனம் தேவை.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic