குரு பெயர்ச்சி (2019 - 2020) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 சிறப்பான வளர்ச்சி (70 / 100)


குரு அதி சாரமாய் மார்ச் 29, 2020 அன்று மகர ராசிக்கு பெயருகின்றார். இதனால் உங்கள் அதிர்ஷ்டம் பெரிய அளவிற்கு அதிகரிக்கும். இதனால் இந்த பாகம் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் ஒரு சிறந்த பாகமாக இருக்கும். சமீப காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் முடிவுக்கு வரும். உங்கள் உடல் உபாதைகள் குறையும். உங்களுக்கு சரியான மருந்து கிடைத்து விரைவாக குணமடைவீர்கள்.
உங்கள் மனைவி/கணவனுடன் இருக்கும் உறவில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள். எனினும், நீங்கள் பெண்ணாக இருந்து, குழந்தை பேருக்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள், கண்டாக சனி நடப்பதால் அதற்கு நீங்கள் உங்கள் பிறந்த சாதகத்தை பார்க்க வேண்டும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். எனினும், ஜூன் 30, 2020க்குள் திருமணம் முடிந்து விடுவதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.


அலுவலகத்தில் உங்கள் வேலை சுமை குறையும். உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் அலுவலக வேலைகளை எளிதாக சமாளிப்பீர்கள், நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள், நல்ல வேலை உங்களுக்கு கிடைக்கும். உங்கள் செலவுகளை குறைத்து, சேமிப்பை அதிகரிப்பீர்கள். உங்கள் மாதாந்திர கட்டணங்களை குறைக்க, கடன் நிதி பரிசீலனை செய்ய இது ஏற்ற நேரம். தொழிலதிபர்கள் இந்த பாகத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். சுய தொழில் புரிவோர்கள் நல்ல நிதி சன்மானங்களையும், வருமானத்தையும், நல்ல செல்வாக்கையும் பெறுவார்கள்.
விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் நீங்கள் எதிர் பார்த்தப் படி கிடைக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். எனினும் உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல், ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.




Prev Topic

Next Topic