![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 01, 2020 முதல் செப்டம்பர் 13, 2020 கலவையான பலன்கள் (50 / 100)
குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு மீண்டும் பெயருவதால், கசப்பான அனுபவங்கள் உங்களுக்கு ஏறபடக் கூடும். கண்டாக சனியின் தாக்கமும் இருப்பதால், நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். அதிக உடல் உபாதைகள் ஏற்படக் கூடும். கண், வயிறு மற்றும் கல்லீரலில் கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும். சரும பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்கள் மனைவி/கணவன் மற்றும் தந்தையின் உடல் நலத்தின் மீது இந்த பாகத்தில் அதிக கவனம் தேவை. போதுமான மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது.
உங்கள் மனைவி/கணவனுடன் இருக்கும் உறவை நல்ல நிலையில் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் சுப காரியங்கள் நிகழ்த்தலாம். உங்கள் வேலை சுமையும் பதற்றமும் மிதமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியும், வெற்றியும் இருக்காது. உங்கள் நிதி நிலை சுமாராக இருக்கும். அதிக பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பங்கு சந்தை வர்த்தகத்தை விட்டு விலகி இருப்பது நல்லது. தொலை தூர பயணம் செய்ய திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் குடியேற்ற பலன்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேக்கம் அடையும்.
Prev Topic
Next Topic