![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | தொழில் அதிபர்கள் |
தொழில் அதிபர்கள்
கடந்த ஒரு ஆண்டு காலம் தொழிலதிபர்கள் கலவையான பலன்களை கண்டிருப்பார்கள். இப்போது விடயங்கள் மோசமாகக் கூடும். இதற்கு காரணம், குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு 4, 2019 அன்று பெயருவதும், சனி பகவான் உங்கள் ராசியின் 1ஆம் வீட்டிற்கு ஜனவரி 23, 2020 அன்று பெயருவதும் தான். இந்த பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இல்லை. நீங்கள் போட்டியாளர்களால், நீண்ட கால ப்ரோஜெக்ட்டை இழக்க நேரிடும். உங்கள் மறைமுக எதிரிகள் உங்களுக்கு எதிரான சதிகளை செய்து உங்கள் வளர்ச்சியை பாதிப்பார்கள்.
உங்களுக்கு எதிராக யார் இப்படி செய்கின்றார்கள் என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கும், பண வரத்து பெரும் அளவு பாதிக்கப்படலாம். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம். மேலும் பண விடயங்களில் நீங்கள் நம்பிக்கை வைத்தவர்களே உங்களை ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்களை ஏமாற்றக் கூடும். உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடக் கூடும். மேலும் உங்களுக்கு வருமான வரி மற்றும் சட்ட சிக்கல்களும் வரக் கூடும். உங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த உங்களுக்கு அதிக பணம் தேவைபடுவதால், நீங்கள் உங்கள் சொத்துக்களை விற்க எண்ணுவீர்கள்.
சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், போன்றவர்களுக்கு இது சிறப்பான நேரமாக இருக்காது. நீங்கள் உங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும்/ பெப்ரவரி 2020 முதல் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு உங்களுக்கு அதிக சவால்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். அதனால் உங்கள் தொழிலை நீங்கள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால், நல்ல சாதக நிலை இருக்கும் உங்கள் குடும்பத்தினர்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால், உங்கள் சோதிடரை அணுகி, ஆலோசனை பெற்று அதன் படி நடந்து கொள்ளுங்கள்.
Prev Topic
Next Topic