குரு பெயர்ச்சி (2019 - 2020) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

நவம்பர் 04, 2019 முதல் மார்ச் 29, 2020 வரை அதிக செலவுகள், அலுவலகத்தில் அரசியல் (45 / 100)


குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு நவம்பர் 4, 2020 அன்று பெயருகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு ஜனவரி 23, 2020 அன்று பெயருகிறார். இந்த பாகத்தில் ஜென்ம சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் செலவுகளை அதிகரிக்கக் கூடும். அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு நீங்கள் நீண்ட கால சோதனை காலத்தில் இருப்பீர்கள் என்பதை நீனைவில் கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் பெற வேண்டும் என்றால் அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும்.
முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம். உங்கள் குடும்பத்தினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்படக் கூடும். நீங்கள் முன்பே சுப காரியம் நிகழ்த்த திட்டமிட்டிருந்தால், அது நடக்கும், அனால் மன அழுத்தமும், செலவுகளும் அதிகமாக இருக்கும்/ சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உங்கள் குழந்தைகளுடன் இருக்கும் உறவு சுமூகமாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் அவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் இந்த பாகத்தில் பாதிக்கப்படலாம்.


வேலை சுமை மற்றும் பதற்றம் அலுவலகத்தில் அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைவாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தற்போது கிடைப்பது சந்தேகமே. உங்கள் மறைமுக எதிரிகள் பலம் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு நிதி பிரச்சனைகள் அதிகமாக இருப்பதால் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். இந்த பாகத்தில் உங்கள் தொழிலை விரிவு படுத்த முயற்சி செய்ய வேண்டாம். உங்கள் செலவுகளை நீங்கள் பெரும் அளவு குறைக்க வேண்டும். யாரிடமும் முடிந்த வரை பணம் கடன் வாங்கவோ அல்லது கடன் கொடுக்கவோ வேண்டாம். உங்கள் நேரத்தை உடல் நலத்தை அதிகப்படுத்துவதிலும், சொந்த வாழ்க்கைக்கும் செலவிடலாம். முதலீடு குறித்த முடிவுகள் எடுக்கும் போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். லலிதா சஹசர நாமம் மற்றும் விஷ்ணு சஹசர நாமம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.



Prev Topic

Next Topic