![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | நான்காம் பாகம் |
செப்டம்பர் 29, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை மன அழுத்தம் மற்றும் பதற்றம் (35 / 100)
குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சுப காரியங்களை நிகழ்த்த உதவி செய்தாலும், நீங்கள் இந்த இறுதி பாகத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிலும், சனி பகவான் ஜென்ம ராசியிலும் சஞ்சரித்து குரு பகவானால் உங்களுக்கு கிடைக்கும் சிறிது அதிர்ஷ்டத்தையும் எடுத்து விடக் கூடும். உங்கள் பதற்றமும், மனக் கவலையும் அதிகரிக்கக் கூடும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும். உங்கள் மனதில் தேவையற்ற பயமும், பதற்றமும் நிறைந்திருக்கும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்து இந்த பாகத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
இந்த பாகத்தில் காதலர்களும், திருமணம் ஆன தம்பதியினர்களும் அதிக பிரச்சணைகளை சந்திப்பார்கள். குழந்தை பேருக்கு திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை. IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சைகள் உங்களுக்கு ஏமாற்றத்தையே தரும். உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் புது உறவை உண்டாக்கிக் கொள்வதோ அலல்து திருமணம் செய்து கொள்வதையோ இந்த பாகத்தில் தவிர்ப்பது நல்லது. உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற நேரம் இல்லை.
நீங்கள் 24/7 வேலை பார்த்தாலும், உங்கள் மேலாளரை இந்த பாகத்தில் மகிழ்ச்சி அடைய செய்ய முடியாது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் வேலையை இழக்கும் சூழலும் உண்டாகலாம். புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்ய இது ஏற்ற நேரமும் இல்லை. தொழிலதிபர்கள் சட்டம் மற்றும் வருமான வரி போன்ற மேலும் பல சவால்களை சந்திக்க நேரிடலாம். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் தங்களுக்கு எதிரான அரசியலால், தங்கள் கமிசனை இழக்க நேரிடும்.
இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை பெரிதும் பாதிக்கப்படலாம். பங்கு சந்தையை விட்டு முற்றிலும் விலகி இருப்பது நல்லது. உங்கள் நேரம் மிக மோசமாக இருப்பதால், எந்த முக்கிய முடிவுகளும் தற்போது எடுக்காமல் இருப்பது நல்லது. அப்படி ஏதாவது செய்தால், அது உங்கள் நிலையை மேலும் மோசமாக்கி விடக் கூடும். இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க, ஒரு நல்ல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று, அதன் படி நடந்து கொள்வது நல்லது. மேலும் அடுத்த குரு பெயர்ச்யில் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு நவம்பர் 20, 2020 அன்று பெயருவதால், விடயங்கள் தற்போது இருக்கும் நிலையில் இருந்து மேலும் மோசமாகக் கூடும்.
Prev Topic
Next Topic