குரு பெயர்ச்சி (2019 - 2020) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

வழக்கு


ஏழரை சனி காலம் மோசமாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், குருவும் உங்களுக்கு சாதகமான நிலையில் இல்லை. இதனால், உங்களால் பெரிதாக நல்ல பலன்களை எதிர் பார்க்க முடியாது. விடயங்கள் உங்களுக்கு எதிராக போகக் கூடும். உங்களுக்கு வழக்கு குறித்த விடயங்களில் அதிக செலவுகள் உண்டாவதோடு, அதன் தீர்ப்பும் நீங்கள் எதிர் பார்த்தது போல இருக்காது. குரு மற்றும் சனி பகவான் இணைந்து ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரை சஞ்சரித்து உங்களுக்கு வழக்கு குறித்த விடயங்களில் அதிக வலி மிகுந்த சூழலையும், எதிர்மறையான தீர்ப்புகளையும் தரக் கூடும்.
உங்கள் மீது தவறு இல்லையென்றாலும், உங்கள் மீது வழக்கு போடப்படலாம். மேலும் கிரிமினல் வழக்குகளில் இருந்து உங்களால் வெளி வர முடியாமல் போகலாம். நீங்கள் அதிகம் பாதிக்கப்பட்டவராக ஆவீர்கள். மேலும் உங்களுக்கு எதிராக யார் செயல் படுகின்றார்கள் என்பதை உங்களால் கண்டறிய முடியாமல் போகலாம். குறிப்பாக நீங்கள் ஐ டி நிறுவனத்தில் பணி புரிவாராக இருந்தால், புதிய சட்டங்களால் அதிக சவால்களை சந்திக்க நேரிடும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு உங்கள் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பைப் பெறுங்கள்.




Prev Topic

Next Topic