![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | காதல் |
காதல்
கேது மற்றும் சனி பகவான் சாதகமற்ற நிலையில் சஞ்சரித்தாலும், குரு மற்றும் ராகு சாதகமான இடத்தில் சஞ்சரித்ததால், காதலர்கள் கலவையான பலன்களை பெற்றிருப்பார்கள். எனினும்,ஜூலை 2019 முதல் அக்டோபர் 2019 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்திருக்கலாம். உங்களுக்கு மேலும் இரண்டு மாதங்கள், அதாவது நவம்பர் மற்றும் டிசம்பர் 2019 உள்ளது. இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆக முயற்சி செயுங்கள.
ஏழரை சனியின் தாக்கம் கடுமையாவதால், ஜனவரி 202௦ முதல் 21/2 ஆண்டு காலத்திற்கு நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள். அடுத்த 4 ஆண்டுகளுக்கு குரு உங்கள் ஜென்ம ராசியை பார்வை இட மாட்டார், அதனால் உங்கள் பிறந்த சாதகம், நிகழும் மகா தசை போன்றவற்றை சார்ந்தே நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.
பெப்ரவரி 2020 முதல் காதலர்கள் பல சவால்கள் மற்றும் வலி நிறைந்த சூழலை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் அதிக சண்டை உண்டாகும். உங்களால் உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்களிடம் இருந்து ஒப்புதல் பெற முடியாமல் போகலாம் . உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் விரும்புபவரை விட்டு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ, ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் பிரிந்து விட நேரிடலாம். குடும்பதினர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ சண்டை ஏதும் இல்லாமல் பார்ஹ்துக் கொள்வது நல்லது. அப்படி எதாவாது உண்டானால், அதற்கு நீங்கள் தீரு காண பல ஆண்டுகள் ஆகலாம்.
Prev Topic
Next Topic