![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் கடந்த ஒரு வருடமாக சஞ்சரித்து நல்ல பலன்களை உங்கள் நிதி வளர்ச்சியில் உண்டாக்கி இருப்பார். இதனால் ஏழரை சனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டிருக்கும். தற்போது குரு உங்கள் ராசியின் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்திற்கு பெயருகின்றார். முக்கிய கிரகங்கலான கேது, குரு மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் செலவுகளை அதிகரிப்பார்கள்.
ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களை தருவார். எனினும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் ஜனவரி 23, 2020 அன்று பெயருவது சிறப்பாக இல்லை. இதனால் உங்கள் உடல் நல பிரச்சனைகள் அதிகமாகக் கூடும். உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் பாதிக்கக் கூடும். நீங்கள் 2020 மற்றும் 2021ல் முதலீடுகளை விட்டு முற்றிலும் விலகி இருப்பது நல்லது. ஜனவரி 2020 முதல் நீங்கள் நீண்ட கால சோதனை காலத்தில் இருப்பீர்கள்.
எதிர்பாரா விதமாக குரு ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை உங்கள் ராசியின் ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். இந்த மூன்று மாதங்கள் தற்போது நிகழும் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் ஒரு மோசமான காலகட்டமாக இருக்கும். அடுத்த சில வருடங்களுக்கு குரு உங்களுக்கு சாதகமான பலன்களை தர இயலாத நிலையில் இருப்பதால், நீங்கள் எந்த முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், உங்கள் பிறந்த சாதக பலனை சார்ந்தே செயல் பட வேண்டும். விஷ்ணு சஹசர நாமம் மற்றும் சுதர்சன மகா மந்திரம் கேட்டு நேர்மறை சக்திகளை பெற்று, விரைவில் நிவாரணம் பெற முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic