குரு பெயர்ச்சி (2019 - 2020) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை மோசமான நேரம் (35 / 100)


குரு மற்றும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பெயருவார்கள். இது உங்களுக்கு மோசமான காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அதிக மன அழுத்தமும், பதற்றமும் இருக்கும். உங்கள் நெருங்கிய உறவுகள் உங்களுக்கு பிரச்சனைகளைத் தருவார்கள். காதலர்கள் மற்றும் திருமணம் ஆன தம்பதியினர் அதிக சவால்களை சந்திப்பார்கள். குடும்பத்தில் அதிகரிக்கும் பிரச்சனைகள் உங்கள் நிம்மதியை எடுத்து விடக் கூடும். உங்கள மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் பயணம் அல்லது வேலை நிமித்தமாக பணி இட மாற்றம் காரணமாக உங்கள் குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்து இருக்க நேரிடும்.
உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக அதிக சதிகளும், அரசியலும் இருக்கும். உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும். மேலும் உங்கள் முதலாளி உங்களுக்கு உறுதுணையாக இருக்க மாட்டார். எச் ஆர் உங்களை செயல் திறன் மேம்படுத்தும் திட்டத்தில் போடக் கூடும். உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சியை எதிர்பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை. இந்த காலகட்டத்தில் நீங்கள் கவனமாக இல்லை என்றால். உங்கள் உத்தியோகத்தை இலக்கக் கூடும். தொழிலதிபர்கள் எதிர்பாராத பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். நீங்கள் கவனமாக இல்லையென்றால் உங்கள் செல்வாக்கும் நற்பெயரும் பாதிக்கக் கூடும்.


உங்கள் நிதி குறித்த விடயங்கள் சிறப்பாக இல்லை. உங்களுக்கு எதிர் பாராத பயணம் மற்றும் மருத்துவ செலவுகளால், செலவுகள் அதிகரிக்கக் கூடும், மேலும் பண விடயங்களில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை ஏமாற்றக் கூடும். நீங்கள் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு பணம் கொடுத்தாலும், அது சரியான நபரை சன்றடையாமல் போகலாம். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு அதிக நட்டத்தை உண்டாக்கும். உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல், ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.


Prev Topic

Next Topic