குரு பெயர்ச்சி (2019 - 2020) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

ஜூலை 01, 2020 முதல் செப்டம்பர் 29, 2020 வரை மிதமான முன்னேற்றம் (50 / 100)


இந்த பாகத்தில் கிரகங்கள் வக்கிர கதி அடைவதால், மிதமான முன்னேற்றத்தை உங்கள் வாழ்க்கையில் காண்பீர்கள். ராகு நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், உங்கள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு உதவி செய்வார். குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து சுப விரைய செலவுகளை உண்டாக்குவார். அதனால் பயணம், சுப காரியங்கள் நிகழ்த்துவது மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்குவது போன்ற விடயங்களுக்காக உங்கள் செலவுகள் அதிகரிக்கும். சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், பதற்றம் சற்று அதிகமாக இருக்கும். உங்கள் மனைவி /கணவன் மற்றும் குடும்பத்தினர்களின் உடல் நலத்தின் மீது கவனம் தேவை.
உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் உத்தியோகத்தை எளிதாக சமாளிப்பீர்கள். எனினும், உங்கள் சொந்த வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை சமாளிப்பதற்காக அதிக நேரம் செலவிடுவதால், உங்கள் உத்தியோகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். அலுவலகத்தில் வளர்ச்சியை எதிர் பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை. தொழிலதிபர்கள் எந்த வளர்ச்சியும் இல்லாமல் இந்த காலகட்டத்தில் மந்தமான சூழலை காண்பார்கள். அதிகரிக்கும் செலவுகளால், உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை அதிகரிக்கக் கூடும்/ இந்த காலகட்டத்தில் உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம். யாரிடமும் முடிந்த வரை கடன் வாங்குவதையோ, அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது.


பங்கு சந்தை வர்த்தகத்தை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது. அடிப்படை தேவைக்காக நீங்கள் வீடு வாங்க முயற்சி செய்யலாம், ஆனால், ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் வாங்கும் வீட்டின் விலை/ மதிப்பு, நீங்கள் வாங்கிய பின் குறையக் கூடும். அடுத்த 3 முதல் 5 ஆண்டுகள் காத்திருந்தால் மட்டுமே உங்கள் சொத்தின் மதிப்பு உயரும்.



Prev Topic

Next Topic