குரு பெயர்ச்சி (2019 - 2020) பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல்


குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து தொலை தூர பயணத்திற்கு உதவியாக இருப்பார், எனினும் உங்களால் பயணத்தின் போது எண்ணியபடி இருக்க முடியாமல் போகலாம். அவசர தேவைக்காக உங்களுக்கு ஏற்படும் பயணம் உங்களுக்கு அதிக பதற்றத்தை தரக் கூடும். வாய்ப்பு இருந்தால், உங்கள் பயணத்தை முடிந்த வரை தவிர்த்து விடுவது நல்லது. பயணத்தின் போது அதிக பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். மேலும் மே 2020 வாக்கில் திருட்டு நடக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
உங்கள் விசா மற்றும் குடியேற்றம் குறித்த பலன்கள் தேக்கம் அடையும். நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து தாய் நாட்டிற்கு நிரந்தரமாக திரும்ப நேரிடலாம். நீங்கள் அணுகும் ஆலோசனை நிறுவனம் உங்களுக்கு அதிக பிரச்சனைகளைத் தரக் கூடும். அவர்கள் சரியான நேரத்தில் உங்கள் சம்பளத்தை கொடுக்காமலும், உங்கள் பாஸ் போர்ட் மற்றும் விசா குறித்த ஆவணங்களை தங்களிடம் வைத்துக் கொண்டும் உங்களுக்கு அதிக பிரச்சனைகளைத் தரக் கூடும்.







Prev Topic

Next Topic