குரு பெயர்ச்சி (2019 - 2020) வேலை மற்றும் உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

வேலை மற்றும் உத்தியோகம்


தற்போது குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு உத்தியோக வளர்ச்சியில் பின்னடைவுகளை உண்டாக்கக் கூடும். எதிர் பாரா விதமாக சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜனவரி 2020 வாக்கில் பெயருகின்றார். இதனால் விடயங்கள் மேலும் மோசமாகக் கூடும். அலுவலகத்தில் உங்கள் வேலை சுமை, மற்றும் பதற்றம் அதிகமாகக் கூடும். மேலும் உங்கள் உடலும் அதிக வேலை பார்க்க உத்துளைக்காமல் இருக்கும். நீங்கள் உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடித்தாலும், உங்கள் மேலாளரை மகிழ்ச்சிபடுத்த முடியாமல் போகலாம். உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடனும், மேலாளருடனும், கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும்.
உங்கள் மறைமுக எதிரிகள் பலம் பெறுவார்கள். மேலும் அவர்கள் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்களுக்கு எதிரான சதிகளை செய்வார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், மே 2020 வாக்கில், உங்களுக்கு, உங்கள் செயல் திறன் குறித்து, எச்சரித்து, எச் ஆரிடம் இருந்து நோட்டீஸ் வரக்கூடும். உங்களைவிட அனுபவம் குறைவாக இருப்பவர்களுக்கு உங்களை விட அதிக பதவி உயர்வை தருவதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். உங்கள் முதலாளி அல்லது உடன் வேலை பார்ப்பவர்களுக்கு எதிராக புகார், வேலையை ராஜினாமா செய்வது போன்று எந்த ஒரு அவசர முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது. இது உங்கள் நிலையை மேலும் மோசமாக்கி விடக் கூடும்.


இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் வாழ்வாதாரதிற்காக உங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இந்த காலகட்டத்தில் வளர்ச்சியை எதிர் பார்க்க முடியாது. நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். தற்போது இருக்கும் நிலையை உங்களால் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றால், அதுவே உங்களுக்கு ஒரு பெரிய சாதனையாக இந்த காலகட்டத்தில் உங்களுக்கு இருக்கும். நீங்கள் வெளி நாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால், உங்களுக்கு விசா குறித்த பிரச்சணைகள் மற்றும், குடியேற்றம் குறித்த பிரச்சனைகள் மே 2020 வாக்கில் வரக் கூடும்.



Prev Topic

Next Topic