![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | தொழில் அதிபர்கள் |
தொழில் அதிபர்கள்
ஆகஸ்ட் 2019 முதல் மிக மோசமான மாதமாக உங்களுக்கு இருந்திருக்கும். ராகு உங்கள் ஜென்ம ஸ்தானத்திலும், கேது, சனி பகவான் களத்திற ஸ்தானத்திலும், குரு 6ஆம் வீட்டிலும் சஞ்சரித்து ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை உங்களுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்புகளை தந்திருக்கக் கூடும். குரு தற்போது தனுசு ராசிக்கு பெயர்ந்து உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவதால், நல்ல பலன்களைத் தருவார்.
உங்கள் நிதி பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்களுக்கு புது முதலீட்டாளர்கள் அல்லது வங்கிக் கடன் போன்றவற்றில் இருந்து நிதி உதவி கிடைக்கும். கடன் நிதி மறுபரிசீலனை செய்வதில் உங்களுக்கு வெற்றிக் கிடைக்கும். உங்கள் நிர்வாக செலவுகளை குறைக்க முயற்சிகள் எடுப்பீர்கள். உங்களுக்கு புது ப்ராஜெக்ட் கிடைப்பதால், உங்கள் பண வரத்தும் அதிகரிக்கும். குரு நல்ல நிலையில் சஞ்சரித்தாலும், பிற முக்கிய கிரகங்களான சனி பகவான், கேது மற்றும் ராகு நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. எனினும், நீங்கள் நல்ல லாபத்தோடு உங்கள் தொழிலில் தொடர்ந்து இருப்பீர்கள். எனினும், தொழிலில் உங்கள் வளர்ச்சி உங்கள் பிறந்த சாதகத்தையும், மகா தசை நடப்பை பொருத்தும் இருக்கும்.
உங்களுக்கு ஜனவரி 23, 2020 அன்று அஷ்டம சனி நடக்க இருப்பதால், நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் குடும்பத்தினர் பெயரை தொழிலில் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால், ரிஸ்க் எடுப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. குரு நவம்பர் 2020 வரை நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், பெரிதாக எந்த பிரச்சனைகளும் இருக்காது. எனினும், 2021ல் உங்களுக்கு அதிக பிரச்சனைகள் ஏற்படக் கூடும். அதனால் செப்டம்பர் அல்லது அக்டோபர் 2020 வாக்கில் பாதுகாப்பாக தொழிலை விட்டு வெளியேறுவது நல்லது. சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் கமிசன் ஏஜெண்டுகள் சிறப்பாக செயல்படுவார்கள்.
Prev Topic
Next Topic