குரு பெயர்ச்சி (2019 - 2020) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

நிதி / பணம்


கடந்த ஒரு வருடமாக உங்களுக்கு அதிகரித்திருந்த கடன்களை பார்த்து நீங்கள் பீதி அடைந்திருக்கக் கூடும். குரு தற்போது உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், நீங்கள் விரைவாக கடன்களை அடைத்து விட உதவுவார். பண வரத்து பல வழிகளில் இருந்து வரும். உங்கள் கடனை நிதி மறு பரிசீலனை செய்து, கடன் சுமையை குறைக்க இது நல்ல நேரம். உங்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் உங்கள் மாதாந்தர நிதி திவைகளில் ஏற்பட்டு, சுமைகள் குறையும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு ஜனவரி 23, 2020 முதல் பெயருவதால், நீங்கள் கவனத்தோடு இருக்க வேண்டும். சனி பகவான் உங்களுக்கு அதிக செலவுகளை ஏற்படுத்தக் கூடும். இதனால் குரு உங்களுக்கு தரும் நேர்மறை சக்திகள் குறையலாம். நீங்கள் புது வீடு வாங்க வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் பலமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் 2021 அல்லது 2022ல் நீங்கள் அதிக கடன் பிரச்சனைகளையும், பண இழப்பையும் சந்திக்க நேரிடலாம்.


உங்கள் நெருங்கிய அல்லது உறவினர்களுக்கு ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை கடன் கொடுப்பதையோ அல்லது அவர்களிடம் இருந்து கடன் வாங்குவதையோ தவிர்ப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் அதிக பணம் குறிந்த பிரச்சனைகள் ஏற்படக் கூடும். மேலும் அவசர செலவுகளும் ஏற்படக் கூடும். ஜூலை 2020 முதல் அக்டோபர் 2020 வரை உங்களுக்கு நிதி நிலையில் ஒரு சுமூகமான சூழல் உண்டாகும். அடுத்த வருடம் 2021 உங்களுக்கு மோசமாக இருப்பதால், இந்த காலகட்டத்தைப் பயன் படுத்தி நீங்கள் உங்கள் நிதி நிலையில் செட்டில் ஆகி விட முயற்சி செய்யலாம்.



Prev Topic

Next Topic