குரு பெயர்ச்சி (2019 - 2020) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

செப்டம்பர் 13, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை நல்ல அதிர்ஷ்டம் (85 / 100)


குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார், மேலும் ராகு 12ஆம் வீட்டிற்கு மீண்டும் பெயருகிறார். இதனால் உங்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கும். அஷ்டம சனியின் தாக்கம் இந்த பாகத்தில் குறைவாக இருக்கும். எந்த உடல் உபாதைகளும் இருக்காது. உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். நல்ல சக்தியை பெறுவீர்கள். நீங்கள் காதலில் விழுந்தாலோ அல்லது உங்கள் திருமணம் நிச்சயம் ஆனாலோ அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. திருமணம் ஆனவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழலை காண்பார்கள்,. நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தைப் பெறுவார்கள். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. போனஸ், சன்மானங்கள், சம்பள உயர்வு போன்றவை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். புது வேலை வாய்ப்பை ஏற்றுக் கொண்டு பெரிய நிறுவனத்தில் சேர இது நல்ல நேரம். உங்கள் வேலை சுமையையும், சொந்த வாழ்க்கையையும் எளிதாக சமாளிப்பீர்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை காண்பார்கள். இது அவர்களுக்கு சிறப்பான நேரமாக இருக்கும். அனைத்து நிதி பிரச்சனைகளிலும் இருந்து வெளி வருவீர்கள். இந்த காலகட்டத்தை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செட்டிலாக முயற்சி செய்யுங்கள்.


எனினும், உங்களுக்கு அஷ்டம சனி காலம் நடந்து கொண்டிருகின்றது என்பதை மறந்து விடாதீர்கள். குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு நவம்பர் 2௦, 2020 அன்று பெயர்ந்ததும், எதிர்மறை சக்திகளை நீங்கள் ஒரே இரவில் உணரக் கூடும். தொழிலதிபர்கள் பாதுகாப்பாக சரியான நேரத்தில் தொழிலை விட்டு வெளியேறி விடுவது நல்லது. இந்த பாகத்தில் உங்கள் தொழிலை விற்று விடுவதோ அல்லது பெயர் மாற்றம் செய்து விடுவதோ நல்லது. நீங்கள் அக்டோபர் 2020க்குள் பங்கு சந்தை முதலீடுகளை விட்டு முற்றிலுமாக வெளி வருவது நல்லது.



Prev Topic

Next Topic