![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | காதல் |
காதல்
உங்கள் காதல் விடயங்களில் கலவையான பலன்களை கண்டிருப்பீர்கள். சனி பகவான் சமீப கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை கண்டறிய உதவி செய்திருப்பார். எனினும் குரு மற்றும் ராகு அக்டோபர் 2019 வரை உங்களுக்கு அதிக பதற்றத்தை உண்டாக்கி இருந்திருப்பார்கள். தற்போது குரு மற்றும் கேது இணைந்து உங்கள் காதல் வாழ்க்கையில் சுமூகமான உறவையும், சூழலையும் உங்களுக்கு உண்டாக்குவார்கள். நீங்கள் விரும்புபவருடன் உங்களுக்கு இருந்து கருத்து வேறுபாடு தற்போது ஒரு முடிவுக்கு வரும். உங்கள் மனைவி/கணவன் அல்லது நீங்கள் விரும்புபவர், உங்களை நன்கு புரிந்து கொண்டு, உங்கள் எதிர் பார்ப்புகளையும் புரிந்து கொண்டு, உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்வார்,
திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள், நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந் தம்பதியினர், தற்போது அந்த பாக்கியத்தைப் பெறுவார்கள். இயற்கையாகவே, குழந்தை பேரு பெரும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சை பெற விரும்பினால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலனை பார்க்க வேண்டும். ஏனென்றால் அடுத்த 12 மாதங்களுக்கு சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிகின்றார்.
நீங்கள் திருமணத்திற்கு முயற்சிகள் செய்து கொண்டிருந்தாள், உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை கிடைத்து, திருமணமும் நடக்கும். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் தருவார்கள். எனினும் மார்ச் 15, 2020க்கு முன் அல்லது ஆகஸ்ட் ௦1, 2020க்கு மேல் திருமணம் செய்வது நல்லது. ஏனென்றால், ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2020 மாதங்களில் உங்கள் உறவுகளுடன் சில குறிப்பிடத்தக்க பின்னடைவுகள் ஏறபடக் கூடும். இந்த காலகட்டம் குறுகியதாக இருந்தாலும், பிரச்சனைகளின் தாக்கம் அதிகமாக இருக்கக் கூடும்.
Prev Topic
Next Topic