குரு பெயர்ச்சி (2019 - 2020) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

கண்ணோட்டம்


குரு உங்கள் ராசியின் 6ஆம் வீடான ரூன ரோக சத்ரு ஸ்தானத்திலும், சனி பகவான் 7ஆம் வீடான களத்திற ஸ்தானத்திலும் சஞ்சரித்ததால், அதிகம் இன்னல்களை சந்தித்திருந்திருப்பீர்கள். மேலும் உங்கள் வாழ்க்கையை மோசமாக்கும் விதமாக, ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு மார்ச் 2019ல் பெயர்ந்து, உங்கள் பிரச்சனைகளின் தாக்கத்தை மேலும் அதிகப்படுத்தி இருந்திருப்பார். உங்களுக்கு உடல் நல பிரச்சனைகளும், மேலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலும் ஏற்பட்டிருந்திருக்கும். குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட்டு உங்கள் மன நிம்மதியை பாதித்திருந்திருக்கும். அலுவலகத்தில் நடக்கும் அரசியலால் நீங்கள் மேலும் ஏமாற்றங்களை சந்தித்திருந்திருப்பீர்கள். கடந்த 12 மாதங்கள் உங்கள் நிதி குறித்த விடயங்கள் பெரிய சவாலாக இருந்திருக்கும்.
குரு தற்போது உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயருவது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும்,. இதனால் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். உங்களுக்கு குருவின் பலத்தால் அதிக நேர்மறை சக்த்திகள் கிடைக்கும். உங்கள் உடல் உபாதைகள் குறையும். உங்கள் உத்தியோகம் மற்றும் குடும்ப சூழலில் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் பெரும் அளவில் உண்டாகும். ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், கேது 6ஆம் வீட்டிலும் சஞ்சரித்து செப்டம்பர் 2020 முதல் அக்டோபர் 2020 வரை உங்களுக்கு உதவி புரிவார்கள்.


இந்த பெயர்ச்சியின் ஒரு பின்னடைவு என்னவென்றால், சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு ஜனவரி 23, 2020 அன்று பெயருவது தான், மேலும் கஏப்ரல், மே மற்றும் ஜூன் 2020 களில் குரு, சனி பகவானோடு இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். நீங்கள் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் 2020 வரை கவனமாக இருந்தால், இந்த குரு பெயர்ச்சியின் மற்ற காலங்கள் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். குரு நவம்பர் 2௦, 2020 வரை நல்ல இடத்தில் சஞ்சரிப்பதால், அஷ்டம சனியின் தாக்கம் தற்போது அதிகமாக இருக்காது.


Prev Topic

Next Topic