![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வலி மிகுந்த சம்பவங்கள் (30 / 100)
குரு பகவான் அதி சரமாய் சனி பகவான் மற்றும் செவ்வாயோடு இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு பெயருவார். உங்கள் ராசியின் 8ஆம் வீடு பாதிக்கப்படுவதால், இந்த குரு பெயர்ச்சியின் இரண்டாம் பாகம் உங்களுக்கு மோசமானதாக இருக்கக் கூடும். உங்களுக்கு மன அழுத்தமும், பதற்றமும் அதிகமாக ஏற்படக் கூடும். உங்கள் நெருங்கிய உறவுகளுடன் உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாகக் கூடும்/ இதனால் உங்கள் மன நிம்மதி குறையும். காதலர்கள் மற்றும் திருமணம் ஆன தம்பதியினர் அதிக சவால் நிறைந்த காலகட்டத்தை இந்த பாகத்தில் சந்திப்பார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உத்தியோகம் அல்லது பயணம் குறித்த காரணத்தால் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு தற்காலிகமாக பிரிய நேரிடலாம்.
அலுவலகத்தில் அதிக அரசியலும், உங்களுக்கு எதிரான சதியும் இருக்கும். உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் நீங்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடும். எனினும், உங்கள முதலாளி உங்களுக்கு உதவி செய்யமாட்டார். மேலும் உங்கள் செயல் திறன் குறித்து எச் ஆரிடம் இருந்து உங்களுக்கு நோட்டிஸ் வரக் கூடும். இந்த காலகட்டத்தில் உங்கள் உத்தியோகத்தில் முன்னேற்றத்தை எதிர் பார்க்க முடியாது. எனினும், இந்த சோதனை காலம் குறுகிய காலத்திற்கு மட்டுமே. ஜூலை 2020க்கு மேல் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் அதிக சவால்களை இந்த பாகத்தில் சந்திப்பார்கள்.
எதிர் பாராத பயணம் மற்றும் மருத்துவ செலவுகளால் உங்கள் செலவுகள் அதிகர்க்கக் கூடும். மேலும் பண விடயங்களில் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் அல்லது உறவினர்கள் உங்களை ஏமாற்றக் கூடும். நீங்கள் தொண்டு நிறுவனத்திற்கு பணம் தானம் செய்தாலும், அது சரியான நபரை சென்றடையாமல் போகலாம். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு அதிக இழப்பை உண்டாக்கக் கூடும். ரியல் எஸ்டேட் முதலீடுகளை உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் செய்வதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic