குரு பெயர்ச்சி (2019 - 2020) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

ஜூலை 01, 2020 முதல் செப்டம்பர் 13, 2020 வரை கலவையான பலன்கள் (55 / 100)


குரு மீண்டும் தனுசு ராசிக்கு பெயருவதால் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். உங்கள் உடல் உபாதைகள் குறையும். உங்களது கடந்த மோசமான சம்பவங்களை ஜீரணிக்க இது நல்ல நேரம். உங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவு நல்ல முன்னேற்றத்தை காணும். உங்கள் பெற்றோர்கள், மனைவி/கணவன் மற்றும் குழந்தைகளின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
உங்கள் மகன் அல்லது மகளுக்கு நல்ல வரன் பார்த்து திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் மன அழுத்தமும், பதற்றமும் குறையும். உங்களுடன் வேலை பார்க்கும் மேலதிகாரிகள் மற்றும் மேலாளர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். நல்ல வெற்றியையும், வளர்ச்சியையும் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் வேலை பார்ப்பதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் தற்போது வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த பாகத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.


ஜூலை 2020 முதல் உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் அதிகரிக்கும் கிரெடிட் மதிப்பால் உங்கள் கடன்களை விரைவாக அடைத்து விடுவீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் உங்கள் சௌகரியத்தை அதிகரித்துக் கொள்ள புது வீடு வாங்குவீர்கள். வங்கி கடன்கள் போதுமான ஆவணங்கள் மற்றும் இணையான சொத்துக்கள் இருப்பதால் விரைவாக ஒப்புதல் பெரும். நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும். உங்களுக்கு அஷ்டம சனி காலம் நடை பெற்றுக் கொண்டிருப்பதால், ஊக வர்த்தகத்தில் அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும்.


Prev Topic

Next Topic