குரு பெயர்ச்சி (2019 - 2020) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


நீண்ட காலம் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை அதிக பணத்தை இழந்திருப்பார்கள். உங்களுக்கு பீதி அடையும் சூழலும் உங்களுக்கு ஏற்பட்ட நிதி இழப்பால் ஏற்பட்டிருக்கும். சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால், நீங்கள் முதலீடுகள் குறித்த விடயங்களில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். குரு சிறப்பான நிலையில் சஞ்சரித்தாலும், சனி பகவான் மற்றும் ராகு குறிப்பிடத்தக்க எதிர்மறை சக்திகளை உங்களுக்குத் தரக் கூடும்.
உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், உங்களுக்கு குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்,. இல்லையென்றால், உங்களுக்கு நட்டம் சேரலாம். குரு உங்களுக்கு பங்கு சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் உதவியாக இருப்பார். எனினும், இந்த வாய்ப்புகளை பயன் படுத்தி அக்டோபர் 2020க்குள் உங்கள் பங்குகளை விற்று விடுவது நல்லது. அஷ்டம சனியின் தாக்கம் அடுத்து வரும் வருடங்களில் அதிகமாக இருக்கும். நீண்ட காலம் பங்கு சந்தையில் இருப்பது பாதுகாப்பானது அல்ல.


உங்கள் முதலீடுகளை பத்திரங்கள், தங்கம் அல்லது அசையா சொத்துக்கள் போன்றவற்றில் போட்டு வைப்பது நல்லது. நிலங்கள் மற்றும் வர்த்தக சொத்துக்களில் உங்கள் பிறந்த சாதகத்தில் பலன் இல்லாமல் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் புது வீடு கட்ட முயற்சி செய்து கொண்டிருந்தாள், அது அடுத்த சில வருடங்களுக்கு முடிக்க முடியாமல் நாட்கள் தள்ளிக் கொண்டே போகலாம்.


Prev Topic

Next Topic