![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | தொழில் அதிபர்கள் |
தொழில் அதிபர்கள்
குரு உங்கள் ஜென்ம ராசியை நவம்பர் 4, 2019 முதல் பார்வை இடுகிறார். இது தொழிலதிபர்களுக்கு ஒரு நல்ல செய்தி. உங்கள வளர்ச்சியில் நீங்கள் தடைகளை கண்டிருந்தால், அது தற்போது இல்லாமல் போகும், உங்கள் மறைமுக எதிரிகள் பலம் இழந்து, உங்களிடம் சரண் அடைவார்கள். உங்கள் போட்டியாளர்கள் உங்களுடைய புதுமையான யோசனைகளுக்கும், நல்ல திட்டங்களுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் பின்வாங்குவார்கள்.
ராகு உங்கள் லாப சாதனத்தில் சஞ்சரித்து உங்கள் நிதி நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். உங்களுக்கு ஜனவரி / பெப்ரவரி 2020 வாக்கில் வங்கி கடன் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி உதவி கிடைக்கும். இதனால் நீங்கள் உங்கள் தொழிலை விரிவு படுத்தலாம். மேலும் புது தொழில் தொடங்கவும் இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது. உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக உயர்வீர்கள்.
உங்கள் வளர்ச்சி யாராலும் தடுக்க முடியாததாக இருக்கும். நீங்கள் எதை செய்தாலும், இந்த 2020ல் பெரிய அளவில் வெற்றிப் பெறுவீர்கள். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் சிறப்பாக இந்த 2020ல் செயல் படுவார்கள். 2020ன் இறுதி பகுதியில் நீங்கள் புது தொழில் தொடங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
Prev Topic
Next Topic