குரு பெயர்ச்சி (2019 - 2020) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

நிதி / பணம்


குரு உங்கள் ஜென்ம ராசி, 11ஆம் வீடான லாப ஸ்தானம் மற்றும் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானம் ஆகியவற்றை நவம்பர் 4, 2019 முதல் பார்வை இடுகிறார். இதனால் உங்கள் அதிர்ஷ்டம் பெரும் அளவு அதிகரிக்கும். உங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் வெளி வந்து விடுவீர்கள். உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்து, மாதாந்திர கடன் சுமையை குறைக்க இது நல்ல நேரம். உங்கள் கிரெடிட் கார்டு மதிப்பு அதிகரிக்கும். குறைந்த வட்டி விகிதத்தில் உங்கள் வங்கிக் கடன் எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். பல வழிகளில் இருந்தும் பண வரத்து உண்டாகும்.
உங்கள் தேவையற்ற மருத்தவ செலவுகள் மற்றும் பயன செலவுகள் குறையும். உங்கள் குடும்பதினர்களுக்காக தங்க நகைகள் வாங்குவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். நல்ல மன நிம்மதியோடு இருப்பீர்கள். நல்ல தூக்கம் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். கடன் குறையும். சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், ராகு 11ஆம் வீட்டிலும், மற்றும் குரு பகவான் 5ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் 2020ல் பல அற்புதங்களை நிகழ்த்துவார்கள்.


உங்கள் முந்தைய வேலை பார்த்த நிறுவனம், இன்சூரன்ஸ் நிறுவனம் அல்லது வழக்குகளில் இருந்து உங்களுக்கு ஒரு நல்ல தொகை செட்டில்மென்ட்டாக கிடைக்கும். ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2020 வரை உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கலாம். புது கார் / வாகனம் வாங்கி உங்கள் சௌகரியத்தை அதிகரித்துக் கொள்ள இது நல்ல நேரம்.


Prev Topic

Next Topic