![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | முதல் பாகம் |
நவம்பர் 04, 2019 முதல் மார்ச் 29, 2020 வரை நல்ல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும் (75 / 100)
7 வருடங்களுக்கு பிறகு குரு உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுகிறார். இதனால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் ஏற்படும். சனி பகவான் மகர ராசிக்கு ஜனவரி 23, 2020 அன்று பெயருவதால், இது மேலும் உங்கள் சக்தியையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் மன குழப்பங்கள் மற்றும் உளவியல் பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். நல்ல ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவீர்கள்.
நீண்ட காலமாக உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்திருந்தால், அவர்களுடன் தற்போது மீண்டும் சேருவீர்கள். உங்கள் குடும்பத்தினர்களுடன் சேர மறுபரிசீலனை செய்ய இது சரியான நேரம். புது உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் இது சரியான நேரம். உங்கள் மனைவி/கணவனுடன் நல்ல அன்யுனியதோடு இருப்பீர்கள். குழந்தை பேருக்காக திட்டமிடும் தம்பதியினர் இயற்கையாகவோ அல்லது IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சை மூலமாகவோ குழந்தை பேரு பெரும் பாக்கியம் உண்டாகும். திருமணத்தை நிச்சயம் செய்ய இது ஏற்ற நேரம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும் பெரும்.
அலுவலகத்தில் உங்கள் திறமையை நிரூபிக்க உங்களுக்கு சிறப்பான வாய்புகள் கிடைக்கும். பெரிய பதவி உயர்வோடும், நல்ல சம்பலதொடும் உங்களுக்கு புது வேலை வாய்ப்பு கிடைத்தால், அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. தொழிலதிபர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காண்பார்கள். விண்ணைத் தொடும் வளர்ச்சி உங்கள் தொழிலில் உண்டாகும். உங்களுக்கு போதுமான பண வரத்து உண்டாகி, உங்கள் கடன்களை விரைவாக அடைத்து விடுவீர்கள். உங்கள் எதிர் காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரம். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் உங்களுக்கு வெற்றியைத் தரும்.
Prev Topic
Next Topic