குரு பெயர்ச்சி (2019 - 2020) (நான்காம் பாகம் ) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

செப்டம்பர் 13, 2020 முதல் நவம்பர் 20, 2020 நல்ல அதிர்ஷ்டம் (95 / 100)


குரு பகவான் உங்கள் பூர்வ புண்ய ஸ்தானத்திலும், சனி பகவான் ரூன ரோக சத்ரு ஸ்தானத்திலும் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவார்கள். உங்கள் வாழ்க்கையில் இந்த பாகம் ஒரு சிறப்பான பாகமாக இருக்கும். உங்களது நீண்ட கால கனவுகளும், ஆசைகளும் இந்த காலகட்டத்தில் நிறைவேறும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பண மழைப் பொழியும். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் எதை செய்தாலும் அது பெரிய அளவு வெற்றியைப் பெரும். நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள், மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப் படுவார்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் சமுதாயத்தில் நல்ல பெயரும், புகழும் பெறுவீர்கள். ஒரு முக்கியத்துவர் அந்தஸ்த்தை பெற்றாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.


நீங்கள் காதலில் விழலாம். ஒரு சரியான வாழ்க்கைத் துணையை கண்டரித்து, திருமணம் செய்து கொள்ள இது சிறப்பான நேரமாக உள்ளது. இந்த பாகத்தில் திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள். குழந்தை பேரு பெரும் பாக்கியமும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. சுப காரியங்கள் நிகழ்த்துவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
வெகு நாட்களாக நீங்கள் காத்திருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் தற்போது உங்களுக்கு கிடைக்கும். பங்கு சந்தையில் இருந்து கிடைக்கும், லாபம், போனஸ் மற்றும் நிதி சன்மானங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். புது வேலை வாய்ப்பை ஏற்றுக் கொண்டு, பெரிய நிறுவனத்தில் சேர இது நல்ல நேரம். உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் அலுவலக சேலைகளை எளிதாக சமாளிப்பீர்கள். தொழிலதிபர்கள் தங்கள் லாபத்தை பணமாக்க இது ஏற்ற நேரம். புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற நேரம். முடிந்த வரை தானம் தர்மம் செய்ய முயற்சி செய்யுங்கள்.




Prev Topic

Next Topic