![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் |
திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள்
கடந்த நாட்களில் ஊடகத் துறையில் இருப்பவர்கள் கலவையான பலன்களை கண்டிருப்பார்கள். குறிப்பாக சொந்த பிரச்சனைகளாலும், உறவுகளுடன் இருந்த பிரச்சனைகளாலும், உங்கள் சக்தி குறைந்து இருந்திருக்கும். குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் சக்தியை அதிகரிப்பார். நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள். மேலும் ஊடகமும், மக்களும் உங்கள் பக்கம் ஈர்க்கப்படுவார்கள்.
பெரிய ப்ரோஜெக்ட்டில் பணி புரிய உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் ருன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு ஜனவரி 23, 2020 அன்று பெயருவதால், நீங்கள் முக்கியத்துவர் அந்தஸ்த்தையும் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். புது உறவை உண்டாக்கிக் கொள்ளவும், திருமணம் செய்து கொள்ளவும் நேரம் நன்றாக உள்ளது.
அரசியலில் இருப்பவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள். உங்கள் கட்சியில் உங்களுக்கு தலைமை பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் அதிக புகழ் பெறுவீர்கள். மக்களிடம் இருந்து உங்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். ஏதாவது வருமான வரி பிரச்சனை அல்லது சட்ட பிரச்சனை இருந்தால், அதில் இருந்து முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள்.
Prev Topic
Next Topic